ETV Bharat / state

பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் குடிநீர் பிடிக்க சூயெஸ் நிறுவனம் எதிர்ப்பு

author img

By

Published : Dec 12, 2019, 6:43 PM IST

கோவை: புலியகுளம் பகுதியில் மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையைப் பெற்ற வெளிநாட்டு நிறுவனம் அப்பகுதியினரை குடிநீர் குழாய்களில் இருந்து தண்ணீர் பிடிக்க எதிர்ப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் குடிநீர் பிடிக்க சூயெஸ் நிறுவனம் எதிர்ப்பு
கோவை புலியகுளம் குடிநீர் பிரச்னை

கோவை மாநகராட்சியின் குடிநீர் வினியோகம் பிரான்ஸ் நாட்டு சூயஸ் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்
பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் அந்நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் தண்ணீர் விநியோகத்தை எடுத்துக்கொண்டால் பொதுக் குழாய்கள் அகற்றப்படும் எனக்கூறி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தற்போது அது உண்மை என்பதை நிரூபிக்கும் விதமாக அந்நிறுவனம் தனது கெடுபிடியை ஆரம்பத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. புலியகுளம் பகுதியில் உள்ள நீர்தேக்கத் தொட்டியில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு மாநகராட்சி மற்றும் தனியார் லாரிகள் மூலமாக தண்ணீர் பிடித்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

புலியகுளம் பகுதியில் உள்ள 69 மற்றும் 70ஆவது வார்டு மாநகராட்சிக்குட்பட்ட பொதுக் குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்றால் பொதுமக்கள் இந்த தண்ணீர் தொட்டியின் குழாய்களில் தண்ணீர் பிடித்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தண்ணீர் தொட்டி அருகே இருக்கும் குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடிக்க செல்லும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக இரும்பு கதவு மூடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கேள்வி எழுப்பியதற்கு, அங்கிருந்த ஊழியர்கள் சூயஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தண்ணீர் தொட்டி இருப்பதால் பொதுமக்கள் இனிமேல் யாரும் தண்ணீர் பிடிக்கக் கூடாது என கூறியுள்ளனர்.

பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் குடிநீர் பிடிக்க சூயெஸ் நிறுவனம் எதிர்ப்பு

இது தொடர்பாக மாநகராட்சியின் உதவிப் பொறியாளர் ஜோதி விநாயகம் தெரிவிக்கையில், குடிநீர் விநியோகம் சூயஸ் நிறுவனத்தின் கட்டுப்பாடில் இருந்தாலும் மாநகராட்சி உத்தரவின் பேரில்தான் அந்நிறுவனம் செயல்படுவதாக கூறினார்.

சூயஸ் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த புலியகுளம் மக்கள் அனைத்துக் கட்சி சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். அதில் தண்ணீர் தொட்டியில் பொதுமக்கள் வழக்கம் போல் தண்ணீர் பிடிக்க அனுமதிக்க வேண்டுமெனவும் இல்லையெனில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: 3 ஆண்டுவரை நீடிக்கும் குடிநீர் பிரச்னை: கரூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

Intro:கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையை பெற்ற சூயெஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் குடிநீர் தொட்டிகள் இருப்பதாக கூறி பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க அதிகாரிகள் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது..

Body: கோவை மாநகராட்சியின் குடிநீர் வினியோகத்தை பிரான்ஸ் நாட்டு சூயஸ் நிறுவனத்திடம் கொடுத்ததால் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் சூயஸ் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் தண்ணீர் விநியோகத்தை எடுத்துவிட்டால் பொது குழாய்கள் அகற்றப்படும் என தொடர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் தற்போது அது உண்மை என்பதை நிரூபிக்கும் விதமாக சூயஸ் நிறுவனம் தனது கெடுபிடியை ஆரம்பத்தித்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது புலியகுளம் பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு மாநகராட்சி மற்றும் தனியார் லாரிகள் மூலமாக தண்ணீர் பிடித்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது மூலம் புலியகுளம் பகுதியில் உள்ள 69 மற்றும் 70 ஆவது வார்டு மாநகராட்சிக்குட்பட்ட இப்பகுதி மக்கள் பொது குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்றால் இந்த தண்ணீர் தொட்டியில் உள்ள குழாய்களில் தண்ணீர் பிடித்துச் செல்வது வழக்கம் இந்த தொட்டி கட்டிய நாளிலிருந்து பல ஆண்டு காலமாக இங்கு மக்கள் தண்ணீர் பிடித்து சென்று வருகின்றனர் இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக இந்த தண்ணீர் தொட்டியில் அருகே இருக்கும் குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடிக்க செல்லும் பெண்களை அனுமதிக்க மறுத்துள்ளனர்
மேலும் பொதுமக்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக இரும்பு கதவை மூடியுள்ளனர் இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் இதற்கு அங்கிருந்த ஊழியர்கள் சூயஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தண்ணீர் தொட்டி இருப்பதால் பொதுமக்கள் இனிமேல் யாரும் தண்ணீர் பிடிக்க கூடாது என கூறியுள்ளனர் இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர் மேலும் பல ஆண்டு காலமாக இங்கு தண்ணீர் பிடித்து வந்த நிலையில் தற்போது சூயஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்ததால் தண்ணீர் பிடிக்க அனுமதி அளிக்கப்படுவதில்லை என அப்பகுதி பெண்கள் தெரிவித்துள்ளனர் சூயஸ் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புலியகுளம் பகுதி மக்கள் அனைத்து கட்சி சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர் மேலும் தண்ணீர் தொட்டியில் பொதுமக்கள் வழக்கம் போல் தண்ணீர் பிடிக்க அனுமதிக்க வேண்டுமெனவும் இல்லையெனில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.