மத்திய அரசுக்கு சொந்தமான என்டிசி பஞ்சாலைகள் தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் உள்ளன. இந்த ஆலையில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வைரஸ் தொற்று காரணமாகவும், பொது முடக்கம் காரணமாகவும் ஆலைகள் மூடப்பட்டன. மேலும் ஆலைகளில் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களுக்கு முழு சம்பளம் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் வழங்கப்பட்டது.
இதை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து முழு சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் ஆலைகள் முழுமையாக இயக்கபடாததால் தொழிலாளர் பலருக்கும் வேலை இல்லை என்றும், இதனால் அவர்கள் வேலையின்றி இருப்பதாகவும் எனவே ஆலைகளை முழுமையாக இயக்கி அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கி முழு ஊதியம் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி என்டிசி ஊழியர்கள் பலரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள பங்கஜா மில் ஆலை முன்பு உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், கோவையில் எச்எம்எஸ், முருகன் மில், கம்போடியா மில், சிஎஸ்டபுள்யூ உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இதையும் படிங்க:
ஒரே மாதிரியான மின்கட்டணம் வசூலிக்கக் கோரிய வழக்கு: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க உத்தரவு...!