கோயம்புத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டி நேற்று (ஆகஸ்ட் 22) காலை வைக்கப்பட்ட 350க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் முத்தன்ணன், சிங்காநல்லூர், குனியமுத்தூர், குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள குளங்களில் கரைக்கப்பட்டன. சிலைகளை கரைக்க நேற்றே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும் சிலைகளை கரைக்க அதிகபட்சமாக ஐந்து பேர் மட்டுமே வர வேண்டும் என்று அரசு கூறியிருந்தது. அதன்படி குறைந்த அளவு நபர்களே சிலைகளை கரைக்க வந்தனர். சிலைகளை கரைக்க வந்த அனைவரின் பெயர் விவரங்களையும் காவல்துறையினர் பதிவு செய்தனர். சிலைகளை குளங்களின் மையப்பகுதிக்கு எடுத்து சென்று கரைக்க காவல்துறையினர் அமர்த்தப்பட்டிருந்தனர். சிலை கரைப்பால் அப்பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: சொந்த ஊரில் ஓபிஎஸ் சாமி தரிசனம்!