கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு கரிய காளியம்மன் கோயில் முன்பு பெரிய அளவிலான குழி தோண்டப்பட்டிருந்ததால் மக்கள் குழப்பம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்த் துறையினர், காவல் துறையினர், குழியைத் தோண்டிய கோயில் அறங்காவலரான செந்தில் என்பவரிடம் குழியை உடனடியாக மூடக்கோரி தெரிவித்தனர்.
ஆனால், குழி தோண்டப்பட்ட இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்றும், இதை உடனே அளந்துதர வேண்டும் என வருவாய்த் துறை அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கோயிலுக்கு வரும் வழியில் சுமார் 120 அடி நீளத்திற்கு மேல் தோண்டப்பட்ட குழியால் பக்தர்கள் கோயிலுக்கு வர முடியாமல் சிரமம் அடைந்தனர்.