குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இந்தச் சட்டத்தை, தங்கள் மாநிலத்திற்குள் நுழைய விடமாட்டோம் என அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து கேரள முதலைமைச்சர் பினராய் விஜயன் மற்றும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகிய இருவரும் கைகோர்த்து ஒரே மேடையில் இருந்து, இந்தச்சட்டத்திற்கு எதிரான கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று கேரள மாநிலம் முழுவதும் அனைத்துக்கட்சிகள் சார்பாக, குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து, முழு அடைப்புப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதனால், கோவையிலிருந்து கேரளாவிற்குச் செல்லும் பேருந்துகள், இயக்கப்படாததால் இன்று உக்கடம் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. முழு அடைப்புபோராட்டம் நடைபெறுவதை அறியாத சிலர் பேருந்து நிலையம் வந்து காத்திருந்து, பின்னர் ரயில்கள் மூலம் கேரள மாநிலம் சென்றனர்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது!