ETV Bharat / state

கண்டசாலாவின் 97ஆவது பிறந்தநாள் விழா - தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு! - கோவை மாவட்டச் செய்திகள்

கோவை: தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் நடைபெற்ற இசையமைப்பாளர் கண்டசாலாவின் 97ஆவது பிறந்தநாள் விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

Tamilisai Soundararajan
Tamilisai Soundararajan
author img

By

Published : Dec 16, 2019, 6:40 AM IST

கோவையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆந்திரா மாநில இசையமைப்பாளர் கண்டசாலாவின் 97ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. உலக தெலுங்கு அமைப்பினர் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இவ்விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

விழாவில் விருது, பரிசுகள் வழங்கியபோது

மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பேசிய தமிழிசை செளந்தரராஜன், "இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை எதிர் பார்க்கவில்லை. தெலங்கானா ஆளுநராக இருந்து தெலுங்கு அமைப்பினர் நடத்தும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பது மகிழ்ச்சி.

விழாவில் போசிய தமிழிசை சௌந்தரராஜன்

ஆந்திராவில் சிறந்த இசை அமைப்பாளர் விருதை கண்டசாலா பெற்றிருக்கிறார். கண்டசாலாவின் 30 ஆண்டுகள் இசை பயணத்தில் அவரை யாரும் மறக்க முடியாது. கோவைக்கு நான் மருத்துவராக வரவில்லை, அரசியல்வாதியாக வரவில்லை, தெலங்கானா ஆளுநராக வரவில்லை, கோவைக்கு மருமகளாக வந்துள்ளேன்’ என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு வருவதென்றால் குழந்தை போல் குதூகலமடைகிறேன் - தமிழிசை

Intro:இசையமைப்பாளர் கண்டசாலா அவர்களின் 97 வது பிறந்தநாள் விழா தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்Body:கோவை வடக்கு கோவை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் இசையமைப்பாளர் கண்டசாலா அவர்களின் 97வது பிறந்த நாள் விழா உலக தெலுங்கு அமைப்பினர் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது இதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு அமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் ஆகியோர் சிறப்பு செய்தனர் அவர்களுக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் மரியாதை செய்தார்.

அதன் பின் நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் தான் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இதை நான் எண்ணிப் பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார் தெலுங்கானா கவர்னராக இருந்து தெலுங்கு அமைப்பினர் நடத்தும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ஆந்திராவில் சிறந்த இசை அமைப்பாளர் விருதை கண்டசாலா அவர்கள் பெற்றிருக்கிறார் என்பது உண்மை என்றும் கண்டசாலா அவர்கள் 30 ஆண்டுகள் இசையில் அவர் செய்த விந்தைகளை யாரும் மறக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் கோவைக்கு தான் மருத்துவராக வரவில்லை அரசியல்வாதியாக வரவில்லை தெலுங்கான ஆளுநராக வரவில்லை என்றும் கோவைக்கு மருமகள் ஆகவேதான் வந்திருப்பதாக கூறினார்.

அதன்பின் கலைநிகழ்ச்சிகள் துவங்கப்பட்டன பரதநாட்டியம் கிருஷ்ணன் பாட்டு போன்றவற்றிற்கு நடன குழுவினர் நடனம் ஆடினர் அதை தமிழிசை சவுந்தரராஜன் கண்டுகளித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.