கோவை: கமல்ஹாசன் பரப்புரையின்போது ஒருவரின் குழந்தைக்கு தனது தாயார் பெயரை சூட்டி, குழந்தைகள் கரோனா சூழலில் அழைத்துவர வேண்டாம் என அறிவுரை வழங்கினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஐந்தாம் கட்ட பரப்புரையை நேற்று கோவையில் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக இன்றும் கோவையில் அவர் பரப்புரை மேற்கொண்டார். கோவை துடியலூர் பகுதியில் பேசிய அவர், எனது கொள்கைகளை செல்லும் இடமெல்லாம் கொண்டு சேர்ப்பேன். இந்த தேர்தல் கட்சிக்கும் கட்சிக்குமான போர் அல்ல, ஊழலுக்கும் நேர்மைக்குமான போர் என்றார்.
மேலும், 3 மாதம் கழித்து இதேபோல் வாழ்க்கை வாழ போகிறோமா அல்லது தமிழ்நாட்டை சீரமைக்கப் போகிறோமா என்று கேள்வி எழுப்பினார்.
பரப்புரை முடிந்து கிளம்பும்போது கூட்டத்தில் ஒரு பெண் அவரது பெண் குழந்தையை எடுத்து வந்து குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கூறினார். அதற்கு கமல், எனது அம்மாவின் பெயர் ராஜலட்சுமி என்று வையுங்கள் என்றார். மேலும், வைரஸ் தொற்று காலத்தில் பரப்புரைக்கு இதுபோன்று குழந்தைகளை எடுத்து வரவேண்டாம் என்று அறிவுரை வழங்கினார்.