கோயம்புத்தூர் மாவட்டம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், இன்று (மார்ச் 28) பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சிவானந்தா காலனி பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடையே கமல்ஹாசன் பேசியதாவது, "கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் உங்கள் முகமாக நான் இருப்பேன். ஒவ்வொரு வார்டுகளிலும் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக செயல்படும்.
நான் ஒரு சினிமா நட்சத்திரம் என்பதை விட உங்கள் வீடுகளில் ஒரு சிறு விளக்காக எரிய ஆசைப்படுகிறேன்.
கோவையை இந்தியாவின் நம்பர் ஒன் நகரமாக மாற்றுவேன். அதை செய்ய பிரதமர் தேவையில்லை. ஒரு எம்எல்ஏவாக என்னால் செய்ய முடியும்" என்றார்.
இதையும் படிங்க: வெற்றி பெற்றால் சிதம்பர ரகசியத்தைக் கூறுகிறேன்- குஷ்பு