கி.ராஜநாராயணன் எழுதிய மிச்சக்கதைகள் நூல் வெளியீட்டு விழா கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரம் அருகிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்களான ஜெயமோகன், நாஞ்சில் நாடன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நாஞ்சில் நாடன் பேசுகையில், "எழுத்தாளர்களைக் கௌரவிக்க அரசு விண்ணப்ப நடைமுறைகளைப் பின்பற்றுவது வெட்கமாகவும், அவமானமாகவும் இருக்கிறது. கி.ரா.வின் வட்டாரச்சொற்கள் கெட்டவார்த்தை என நினைத்து நிகழ்கால எழுத்தாளர்கள் அவரின் வட்டாரச்சொற்களை புறக்கணிப்பது வேதனையாக இருக்கிறது" என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கோவை சிறுவாணி வாசகர் வட்டம் சார்பில் நிலைநிறுத்தல் என்ற நூல் கி.ரா நாராயணனுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு வெளியிடப்பட்டது.
தொடர்ந்து கி.ராவின் மிச்சக்கதை நூலை ஜெயமோகன் வெளியிட நாஞ்சில் நாடன் பெற்றுக்கொண்டார். ரூ.350 விலை மதிப்பிலான கி.ரா வின் மிச்சக்கதைகள், நூல் வெளியீட்டு நாள் என்பதால் சலுகையாக ரூ.250க்கு அரங்கில் விற்பனை செய்யப்பட்டது.