ETV Bharat / state

அதிமுக போலி இணையதளம், கொலை மிரட்டல் வழக்கு: கே.சி. பழனிசாமிக்கு நிபந்தனை பிணை

author img

By

Published : Feb 11, 2020, 11:44 PM IST

கோவை: அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட கே.சி. பழனிசாமிக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியுள்ளது.

கே.சி. பழனிசாமி  அதிமுக போலி இணையதளம்  கோவை செய்திகள்  Coimbatore news  k c palanisamy get bail from admk fake website case
கே.சி. பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமீன்

அதிமுக பெயரில் இணையப்பக்கம் நடத்தி, அதில் அக்கட்சி சின்னத்தைப் பயன்படுத்தியதாகவும்; இது குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக பிரமுகர் கந்தவேல் என்பவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி கடந்த ஜனவரி 25ஆம் தேதி சூலூர் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது மோசடி, கொலை மிரட்டல் உட்பட 17 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யபட்டது. இந்த வழக்கில் பிணை கேட்டு, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கே.சி. பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சக்திவேல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கே.சி. பழனிசாமி  அதிமுக போலி இணையதளம்  கோவை செய்திகள்  Coimbatore news  k c palanisamy get bail from admk fake website case   கே.சி. பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமீன்
கே.சி. பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமின்

விசாரணையில் கே.சி. பழனிசாமி தரப்பு, புகார் அளித்த அதிமுக பிரமுகர் கந்தவேல் தரப்பு, அரசுதரப்பு வழக்கறிஞர்கள் என மூன்று தரப்பினரும் ஆஜராகி வாதிட்டனர். இதனையடுத்து மனுவின் மீதான விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை கே.சி.பழனிசாமிக்கு நிபந்தனை பிணை வழங்கி, நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: காதலர் தின அட்டைகளை கிழித்து ஆர்.எஸ்.எஸ் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.