கோயம்புத்தூர் : உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதனுக்கு கோவை பார் அசோசியேசன் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நேற்று(ஜுலை 15) நடைபெற்றது. இதில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோவை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக நீதிபதியைப் பாராட்டிப் பேசினர்.
பின்னர் நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நீதிபதி விஸ்வநாதன், ''நான் தமிழர் தான். தாய் மொழி தமிழ் தான். தமிழகத்தில் தான் படித்தேன். எந்த சந்தேகமும் வேண்டாம். உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற பதவியின் அடிப்படையில் இங்கு நான் பேச வரவில்லை. நான் கோவையைச் சேர்ந்தவன். நான் கோவையை விட்டுச்சென்று இருக்கலாம். ஆனால், என்னுடைய மனதிலிருந்து கோவை விலகவில்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதி என்பதை பதவியாக காணவில்லை. ஒரு பொறுப்பாக கருதுகிறேன்.
சிறு வயதிலிருந்தே வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஈர்ப்பு எனக்கு இருந்தது. என் தந்தைக்கு என்னைவிட கூடுதலாகவே விருப்பம் இருந்தது. பள்ளிப் பருவத்தில், மாறுவேடப் போட்டியில் கூட வழக்கறிஞர் வேடம் போட்டுக்கொண்டு தான் சென்று இருக்கிறேன். அப்போது எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அதற்கு பிளாஸ்டிக் கோப்பை கொடுத்தார்கள். பொள்ளாச்சி கமலா ஸ்டோரில் வாங்கியிருப்பார்கள் போல'' என நகைச்சுவையாக என் தந்தை தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஜெருசலேம் புனித யாத்திரைக்கு கூடுதலானோர் பயணிக்க முதல்வர் நடவடிக்கை - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
கோவை வழக்கறிஞர் சங்கம் நான் நீதிபதியாக உதவியது. சட்டத்தின் மீதான ஆர்வம், ஆரம்ப காலத்தில் இருந்தது. முதல் இரண்டு வருடங்கள் ஏற்படாவிட்டாலும், மெல்ல மெல்ல ஏற்பட்டது. கோவை குடிமகனாக இங்கு வந்து பேசி வருகிறேன். என் வாழ்க்கையில் பல தடவை விதி விளையாடியுள்ளது. அதில் விதியின் விளையாட்டு 1 பார்த்தீங்கண்ணா... பந்தய சாலையில் வழக்கமாக சாரதாம்பாள் கோவிலுக்குச் செல்வேன். அதற்கு எதிரே உள்ள டெக்ஸ்டல் லைப்ரரி போவன். ஏ.சி.க்காகவே நூலகத்திற்குச் செல்வேன். அப்போது ஏ.சி. புதிதாக வந்த காலம். அங்கு நீதித்துறை குறித்த புத்தகங்கள் இருந்தது. அதைப்படிக்கும் பொது டெல்லி சென்று வாதிடல்லாம் என்ற எண்ணங்கள் தோன்றியது.
விதியின் விளையாட்டு 2 கையில் பணத்தையும் கொடுத்து டெல்லிக்கு வேலைக்கு அழைத்தார்கள். நானும் சென்றேன். இந்த காலத்து பசங்க ஆழ்ந்து படிக்கத் தெரிந்தவர்கள். அப்போது நாங்கள் அப்படி இல்லை. அப்போது அவசர புத்தி இருக்கும். நான் தலைசிறந்த வழக்கறிஞர் கிடையாது. நம்பிக்கை இருந்தால் கடவுள் பாதி தூரம் வருவார். நமக்கான வாய்ப்பை வழங்குவார். அதை நான் நம்புகிறேன். கோவையில் பல தலைசிறந்த, முக்கிய வழக்குகள் இருக்கின்றன.
எவிடன்ஸ் சட்டம் 27 ஆத்தப்பன் கவுண்டர் வழக்கில் தவறான தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பான வழக்கு நடத்தப்பட்டுள்ளது. கோவை வழக்கறிஞர்கள் நாட்டில் எந்த வழக்கறிஞர்களுக்கும் குறைந்தவர்கள் இல்லை. மேலும் கோவையில் அந்த காலத்திலேயே பெண் வழக்கறிஞர்களும் பணி செய்து வந்தார்கள்.
இப்போது பல பெண் வழக்கறிஞர்கள் உருவாகி வருகிறார்கள். 65% முதல் 75% பெண் வழக்கறிஞர் இப்போது படித்து வருகிறார்கள். அந்த காலத்தில் பெண்களுக்கு கல்லூரியில் அனுமதி இல்லை. படித்தாலும் பட்டம் இல்லை. படித்தாலும் வழக்கறிஞர் என்ற அங்கீகாரத்தைக் கொடுக்க மறுத்த காலம் வரலாற்றில் உள்ளது'' என்றார்.
''பெண்கள் முன்னுக்கு வரமால் செய்ய பல தடைகள் இருந்தது. பல இளம் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் திறமை வீணாகிறது. இளம் வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்கள் பணியில் எடுத்துக் கொள்ள சில திட்டங்களை அமல் செய்ய வேண்டும், அது என்னுடைய விருப்பம்.
சட்டத்தை மட்டுமின்றி உடல் நலம் காப்பது, முதலீடு செய்வது குறித்து இளம் வழக்கறிஞர்களுக்கு கற்பிக்க வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு என்னுடைய ஒரே வேண்டுகோள். உங்களுக்கு கொடுக்கப்படும் வழக்கில் கடுமையாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும். இந்த துறையில் கடுமையாக உழைப்பவர்களுக்கு எதிர்பாராத பரிசு நிச்சயம் கிடைக்கும்'' என்று இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க : Surya Speech: கல்வி மூலம் வாழ்க்கையைப் படியுங்கள் - அகரம் விழாவில் நடிகர் சூர்யா பேச்சு!