ETV Bharat / state

'ஜூலை 9-ல் கோவை மத்திய சிறை முற்றுகை' - மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அறிவிப்பு

கோவை மத்திய சிறையை வருகின்ற ஜூலை 9ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

kovai central jail
மனிதநேய மக்கள் கட்சி
author img

By

Published : Jun 24, 2023, 11:14 PM IST

'ஜூலை 9-ல் கோவை மத்திய சிறை முற்றுகை' - மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அறிவிப்பு

கோயம்புத்தூர்: இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் ஜூலை 9ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கோவை மத்திய சிறையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 37 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் ஜூலை 9ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.

மேலும், கோவை மத்திய சிறையில் நீண்ட ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். மேலும்,கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

மேலும் 'நேற்று பாட்னாவில் பாஜகவிற்கு எதிராக 16 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு சிறப்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டமானது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஆரம்பிக்கப்பட்ட அடித்தளத்தின் நோக்கமாகும்.

மேலும், வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் எவ்வாறு மதச்சார்பற்ற அமைப்புகள் ஓரணியில் உள்ளனர் என்பதை எடுத்துச் சொல்லியிருந்தார். இந்த கருத்து இந்தியாவிற்கே முன் மாதிரியான கருத்தாக அமைகிறது.

இதே அடிப்படையை அனைத்துக் கட்சிகளும் பின்பற்றலாம் என்ற தெளிவான கருத்தைக் கூறியுள்ளார். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற உள்ளது. மேலும் முதல் கூட்டமானது மதம் மற்றும் இன்னும் போன்ற பிற காரணங்களால் நாட்டை பிளவுபடுத்தக் கூடிய பாஜகவிற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது நல்ல முயற்சியாகும்.

மேலும், இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி எழுப்பிய பிரச்னை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவில் விவாதித்து நல்ல முடிவை எடுப்போம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

தமிழக ஆளுநர் தமிழக மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.சட்டமன்ற சட்ட முன் வடிவுகளை ஒப்புதல் வழங்காமல் வைக்கிறார். சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும். அவர் எவ்வளவு நாள் வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ளட்டும். ஆனால் அனுமதி வழங்கி தான் ஆக வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:எகிப்து சென்றார் பிரதமர் மோடி! இந்திய வீரர்களின் கல்லறையில் அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.