இது குறித்து அந்நிறுவன ஊழியர் பாரதிதாசன் கூறியதாவது, “கரோனா பாதிப்பை காரணம் காட்டி பல்வேறு ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே அதிக நேரத்திற்கு வேலை வாங்குகிறது. இந்நிலையில், கோவையில் பிரபல ஐடி நிறுவனமான சிடிஎஸ்(CTS) நிறுவனத்தில் ஊரடங்கை காரணம் காட்டி வலுக்கட்டாயமாக ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்ய சொல்லி வற்புறுத்துகின்றனர்.
மேலும், பலருக்கு வேலை நேரத்தை தவிர அதிகளவு வேலையை அளித்து, மன அழுத்தத்துக்கு உட்படுத்தி, தாங்களாகவே வேலையை விட்டு செல்லும்படி செய்கின்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஐடி ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் 66 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!