சிஏஏ (CAA), என்ஆர்சி (NRC) என்பிஆர் (NPR) ஆகிய சட்டங்களை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசைக் கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மக்களின் போராட்ட குரலுக்கு செவி சாய்க்காமல் மத்திய அரசு தனது அதிகார போக்கை செயல்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசைக் கண்டித்து கையில் தேசிய கொடிகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
'சிவாஜி, இந்திரா பெயர்களை ஒருபோதும் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்தியதில்லை'
போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வபுரம் ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் காதர், "மத்தியில் ஆளக்கூடிய அரசானது பல்வேறு சட்டங்களை போட்டு மக்களை கொடுமை செய்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், ஒரு கருப்புச் சட்டம். அதை வாபஸ் பெறும் வரை இந்த போராட்டம் தொடரும்" என்றார்.