ETV Bharat / state

மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு அதிநவீன ரோபோ!

கோவை: மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு சூலூரில் அதிநவீன ரோபோ அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

மனித கழிவுகளை அகற்றும் பணிக்கு அதிநவீன ரோபோ அறிமுக விழா
author img

By

Published : Oct 2, 2019, 12:33 PM IST

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு ரோபோவை கோவை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த ரோபோ அறிமுக நிகழ்ச்சி இருகூரில் நடைபெற்றது.

மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு அதிநவீன ரோபோ அறிமுக விழா

இதில் தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் அதிநவீன ரோபோவை அவர் அறிமுகம் செய்துவைத்தார்.
இதையும் படிங்க: நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க துப்புரவு பணியாளர்கள் மனு!

Intro:மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு மேம்படுத்தப்பட்ட அதிநவீன ரோபோ அறிமுக நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது

Body:கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் மனித கழிவுகளை அகற்றும் பணிக்கு அதி நவீன ரோபோவை கோவை மாநகராட்சிக்கு வழங்க உள்ளது இதன் ஒரு பகுதியாக இந்த ரோபோ அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இருகூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய மையத்தில் நடைபெற்றது இதில் தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த அதிநவீன ரோபோவினால் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் சம்பவம் இனி நடைபெறாது எனவும் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் இதன் மூலம் சரிசெய்ய முடியும் என தெரிவித்தார் மேலும் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை மனித கழிவுகளை அகற்றும் பணியின் போது தமிழகத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் இனி இந்த ரோபோ பணியால் ஒருவர் கூட உயிர் இழக்காமல் காக்க முடியும் என தெரிவித்தார் இந்த புதிய அதிநவீன ரோபோவை உருவாக்கிய கேரளாவைச் சேர்ந்த விமல் கூறுகையில் கேரள மாநிலத்தில் மனித கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து பொறியியல் பட்டதாரியான தான் இந்த ரோபோவை கண்டு பிடித்ததாகவும், எளிதாக கையாளும் வகையில் இந்த ரோபோ நவீன டெக்னாலஜி உள்ளதாகவும், தற்போது 35 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்படும் இந்த ரோபோ அதிக அளவில் பயன்பாட்டுக்கு வரும்போது விலை குறையும் என தெரிவித்தார் மேலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் மனித கழிவுகளை அள்ளும் பணியில் இந்த ரோபோ பயன்பாட்டை கொண்டுவர அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் பொது மேலாளர் சந்தீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.