பொள்ளாச்சியில் இளம் தொழில் முனைவோர் மையத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், அங்கிருந்த இளம் தொழில் முனைவோர்களிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய பாண்டியராஜன், தமிழ்நாட்டில் தொல்லியல் துறையை தொலைநோக்கு பார்வைக்கு கொண்டும் செல்லும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் நம் மூதாதையர்கள் விட்டுச் சென்ற கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்வதற்கு மத்திய அரசு உதவி இல்லாமல் செய்ய முடியாது. அதன்படி வரும் திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகளில் டெல்லி சென்று கலாசாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை சார்ந்த செயலாளர்கள், அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார்.
கீழடியில் அடுத்தக்கட்ட ஆய்வு நடத்த உலக பிரசித்திப் பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்த போகிறோம் என்றார். மிக விரிவான ஆய்வு நடத்தி தமிழ்நாடு அரசு அளித்த ஒரு ஏக்கர் நிலத்தில் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை உலகறியச் செய்யும் வகையில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார். கீழடியில் சுற்றியுள்ள நான்கு கிராமங்களில் அகழாய்வு நடத்த தமிழ்நாடு அரசிடம் அதிக நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலக புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தோடு, கீழடியில் அடுத்தகட்ட ஆய்வு நடத்த திட்டம்