ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டியலின மக்கள் மீது ஆதிக்கவாதிகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற ஜனநாயக கட்சியினர் சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆதிக்கவாதிகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் விழுப்புரத்தில் மாணவி ஒருவரை எரித்த குற்றவாளிகளுக்கு உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இது குறித்து பேசிய திராவிடர் தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி, “ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 40 நாள்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டியலின மக்கள் மீது ஆதிக்கவாதிகள் சாதி ரீதியான வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டியலின மக்கள் மீது 10-க்கும் மேற்பட்ட கொலைகள், 12-க்கும் மேற்பட்ட தனிநபர் தாக்குதல்கள், ஐந்திற்கும் மேற்பட்ட கும்பல் தாக்குதல்களை ஆதிக்கவாதிகள் நடத்தியுள்ளனர். இது கரோனா தீநுண்மியைவிட மிகக் கொடியது” எனக் கூறினார்.
இதையும் படிங்க...ரஜினி தனது நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் - வ.கௌதமன்