ETV Bharat / state

மேற்கு மண்டலத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன - காவல் துறை ஐஜி சுதாகர்

மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் குற்றங்கள் குறைந்துள்ளன என மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் கூறியுள்ளார்.

மேற்கு மண்டலத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது - ஐஜி சுதாகர்

author img

By

Published : Dec 13, 2022, 6:26 PM IST

மேற்கு மண்டலத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன - காவல் துறை ஐஜி சுதாகர்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் கோவை சரக உயர் காவல் அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் 27 டி.எஸ்.பி, 8 ஏடிஎஸ்பி, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2022ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட குற்றச்சம்பவங்கள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் சீராய்வு செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுதாகர், ”கடந்த ஆண்டில் கோவை சரகத்தில் 142 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகும். இந்த ஆண்டு 91 கொலைகள் தான் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். அதே சமயம், கடந்த ஆண்டினைக் காட்டிலும் ஆதாய கொலைகள் குறைந்துள்ளன. சென்ற ஆண்டினைவிட இந்த ஆண்டு வழிப்பறி செய்தல் வெகுவாக குறைந்துள்ளது. சென்ற ஆண்டு 78 வழக்குகள் வழிப்பறியும், இந்த ஆண்டு வந்து 52 வழக்குகளும் பதிவாகியுள்ளது.

அது மட்டும் இல்லாமல் குழந்தைக்கு எதிரான பாலியல் வழக்கில் சென்ற ஆண்டு 431 வழக்குகள் பதியப்பட்டிருந்தன. இந்த ஆண்டு 529 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. போக்சோ வழக்கில் 17 பேர் தண்டனை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 87 வழக்குகளில் தண்டனைப் பெற்றுள்ளனர். அதேபோன்று சென்ற ஆண்டு குண்டர் சட்டத்தில் 123 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த ஆண்டு 155 பேர் குண்டர் சட்டத்திலும், மூன்று பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று பல்வேறு பகுதிகளில் கஞ்சா ஒழிப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுகள் அதிகமாக நடைபெற்றுள்ளது. கோவை சரகத்தில் 1,211 கிராமங்கள் கஞ்சா பழக்கம் உள்ள கிராமங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து 721 கிராமங்களில் கஞ்சா அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் 60% கஞ்சா ஒழிப்புப் பணி நிறைவேறியுள்ளது.

மேலும் மேற்கு மண்டலத்தில் 47 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பல்வேறு வகையில் காவல்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புடன் இணைந்து செய்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல் தொண்டு நிறுவனம் சார்பாக காவலர்களுக்கு மெடிக்கல் கிட் ( ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி ) வழங்கப்பட்டது. அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தைக் கணக்கில் கொண்டு தினமும் அதை பரிசோதனை செய்து ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டு மருத்துவரை சந்திப்பதற்கான வழிவகை செய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர்; கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.