ETV Bharat / state

நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்காததால் படம் எடுக்க தொடங்கினேன்- ஆர் ஜே பாலாஜி

சினிமாவில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்காததால் நாமே படத்தை எடுக்கலாமே என்றுதான் படம் எடுக்க தொடங்கினேன் என்று ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்காததால் படம் எடுக்க தொடங்கினேன்- ஆர் ஜே பாலாஜி
நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்காததால் படம் எடுக்க தொடங்கினேன்- ஆர் ஜே பாலாஜி
author img

By

Published : Jun 18, 2022, 7:16 PM IST

கோயம்புத்தூர்: நடிகர்கள் ஆர்ஜே. பாலாஜி, ஊர்வசி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ”வீட்ல விசேஷம்” என்ற திரைப்படம் நேற்று (ஜூன் 17) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள ப்ரூக் ஃபீல்ட்ஸ் மாலில் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த பொதுமக்களிடம் படத்தின் கதாநாயகரும் இயக்குநருமான ஆர் ஜே பாலாஜி படம் குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது, தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த அமுதா என்பவர் நாட்டாமை படத்திற்கு பிறகு இந்தப் படத்திற்குதான் வந்துள்ளதாகவும், தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆர்ஜே பாலாஜி அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் தனக்கு அருகில் அமரவைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், "கோவையில்தான் ஆர்ஜே வேலையை தொடங்கினேன். 300 கொலைகள் 500 கத்திக்குத்துகள் என்றெல்லாம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கின்ற சாத்வீகமான படம் இது. ஹிந்தி படத்தை காட்டிலும் இப்படம் நன்றாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனது படத்திற்கு குழந்தைகள் அதிகம் வருவதால் கொலை, போதை பொருட்கள் விற்பது போன்று நடிக்க எனக்கு விருப்பமில்லை. ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் போன்ற படங்கள் வருவதால் இது போன்ற படத்திற்கு மக்கள் விருப்பம் காட்ட மாட்டார்கள் என்ற பயம் இருந்தது. தற்போது அந்த பயம் இல்லை. PAN இந்தியா படங்களும் ஓட வேண்டும், இது போன்ற படங்களும் ஓட வேண்டும்.

ஆர் ஜே பாலாஜி பேட்டி

PAN இந்தியா படம் விருந்து இலையில் வைக்கும் குலோப் ஜாமுன் என்றால் இப்படத்தை மாங்காய் ஊறுகாய் என்று பார்க்கிறேன். படிப்பு, வேலைக்காக கோவையை விட்டு சென்னை போகும்போது மனவருத்தம் இருந்தது. திரைப் பட வெளியீட்டிற்கு ஓடிடி தலங்கள் நல்லது. சினிமாவில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்காததால், நாமே படத்தை எடுக்கலாம் என்று படத்தை எடுக்க ஆரம்பித்தேன்" என்றார்.

மீண்டும் நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்பு உள்ளதா எனக் கேள்வி எழுப்பியதற்கு, அந்தந்த படத்திற்கு யார் ஏற்ற நடிகர் நடிகையரோ அவர்களைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் அதுதான் சிறந்ததாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டின்னருக்கு ரூ.1.5 லட்சம்... வீடியோ காலுக்கு ரூ. 30 ஆயிரம்... கிரண் அதிரடி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.