ETV Bharat / state

’தனியார் மருத்துவமனைகளில் விரைவில் இலவச கரோனா தடுப்பூசி’

author img

By

Published : Jul 20, 2021, 3:46 PM IST

Updated : Jul 20, 2021, 4:22 PM IST

தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Health minister Ma Subramanian
அமைச்சர் சுப்பிரமணியன்

கோயம்புத்தூர்: சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு-கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுவரும் கரோனா, ஜிகா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வுசெய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "டெங்கு வைரசின் தொடக்கமாக ஜிகா வைரஸ் பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும், பரிசோதனைக்குப் பிறகு அனுமதிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஏடிஸ் கொசு டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா உள்ளிட்ட நோய்களை உருவாக்கிறது.

கொசு ஒழிப்புப் பணி

கொசு ஒழிப்புப் பணியில் சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீர்நிலைகளில் கம்பூசியா மீன்களைப் கொண்டு கொசுக்களை அழிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போதுவரை தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் கண்டறியப்படவில்லை.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூருக்கு மட்டும் தற்போதுவரை 10 லட்சத்து 96 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒன்றிய அரசு கொடுக்கும் தடுப்பூசிகளைத் தாமதப்படுத்தாமல் தமிழ்நாடு சுகாதாரத் துறை பொதுமக்களுக்குச் செலுத்திவருகிறது. தற்போதுவரை ஒன்றிய அரசு ஒரு கோடியே 87 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளளது. தமிழ்நாட்டில் இன்னும் 12 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. தடுப்பூசி செலுத்தும் பணியில் கட்சிப் பாகுபாடு பார்ப்பதில்லை.

இலவச கரோனா தடுப்பூசி

ஒன்றிய அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கும் 25 விழுக்காடு தடுப்பூசியும் பயன்படுத்தப்படாத நிலையில், தொழில் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா தடுப்பு ஊசி செலுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்" எனக் கூறினார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் குறித்த கேள்விக்கு, ’அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்’ என்றார் மா. சுப்பிரமணியன் அக்கறையாக.

இதையும் படிங்க: 125 நாள்களுக்கு பிறகு 30 ஆயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு

Last Updated : Jul 20, 2021, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.