ETV Bharat / state

கோவையில் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய பிரமாண்ட ஐமேக்ஸ் திறப்பு!

author img

By

Published : Apr 24, 2023, 7:57 PM IST

கோவையில், தென்னிந்தியாவில் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய, முதல் ஐமேக்ஸ் திரையரங்கை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

கோவையில் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மாண்ட ஐமேக்ஸ் திறப்பு!!

கோவையில் முதன்முறையாக லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் ஐமேக்ஸ் திரையரங்கம் அவினாசி சாலை விமான நிலையம் அருகே பிராட்வே சினிமாஸ் நவீன தொழில்நுட்பத்துடன், கூடிய ஒன்பது திரைகளைக் கொண்ட நவீன மல்டிப்ளெக்ஸ் திரையரங்கை, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.

இந்த புதிய ஐமேக்ஸ் திரை, அற்புதமான லேசர் புரஜக்‌ஷன், 12 சேனல் கொண்ட ஒலி அமைப்பு, துல்லியமான கிரிஸ்டல் க்ளியர் படங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட துல்லியமான ஒலியுடன் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய பிராட்வே மெகாப்ளெக்ஸ் குறித்து அதன் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார் மற்றும் இயக்குநர் பாலமுருகன் ஆகியோர் கூறுகையில், ’’பிராட்வே மெகாப்ளெக்ஸ் நாட்டில் வெள்ளித்திரை அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் நோக்கத்துடன், பொழுது போக்கிற்கான சிறந்த இடத்தை வழங்கும் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டது.

ஐமேக்ஸ் லேசர், EPIQ பிரீமியம் பெரிய வடிவம் மற்றும் கோல்ட் ஸ்கிரீன் திரைகள் மூலம் ப்ராட்வே சினிமாஸ் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும். மேலும் EPIQ பிரீமியம் எனும் பெரிய வடிவம், அதன் அதிவேக தொழில்நுட்பத்துடன், திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும்.

அனைத்து திரைகளும் ஸ்டேடியம் போன்ற இருக்கைகளுடன், பிரமாண்டமான வெள்ளித் திரை அனுபவத்தை, சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளது'' எனத் தெரிவித்தார்.

திரையரங்க அனுபத்தில் புதிய மாற்றமாக, மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தை கொண்டாட பிராட்வே 9 ஸ்கிரீன் மல்டிபிளெக்ஸ், 15க்கும் அதிகமான சில்லறை விற்பனை கடைகள், 2 மாடி கேமிங் அமைப்பு, 38 தரமான சிறு சிறு ஃபேஷன் உடை நிறுவனங்கள், ஹோட்டல்கள், பார், உணவகங்கள் மற்றும் விருந்து மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு தனித்துவமான இடமாக ப்ராட்வே செயல்பட உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கட்டட வடிவமைப்பாளர் ஜியோ வானிக் கேஸ்ட்ரால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த புதிய ஐமேக்ஸ் தியேட்டரில் விக்ரம், ஐஷ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் நடித்து வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரையிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: G Square IT Raid: ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரி சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.