ETV Bharat / state

கொப்பரை தேங்காய் விலையை அரசு ஏற்றம் செய்ய வேண்டும் - நட்பமைப்பு ஆர்ப்பாட்டம்! - Pollachi coconut

தமிழ்நாடு மாநிலத் தென்னை சிறு நிறுவனம் நட்பமைப்பு சார்பில், கொப்பரை தேங்காய் விலையை அரசு ஏற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொப்பரை தேங்காய் விலையை அரசு ஏற்றம் செய்ய வேண்டும் - நட்பமைப்பு ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jul 13, 2022, 9:36 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பல்லடம் சாலையில், தமிழ்நாடு மாநிலத் தென்னை சிறு நிறுவனங்கள் நட்பு அமைப்பு சார்பில், தமிழ்நாடு அரசு கொப்பரை தேங்காய் விலையை ஏற்றம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாமோதரன், அமுல் கந்தசாமி மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், “பொள்ளாச்சி, சூலூர், ஆனைமலை, சுல்தான்பேட்டை விவசாயிகள் கொப்பரை கொள்முதல் செய்தும், உடனடியாக பணம் கிடைப்பதில்லை. ரூ.105.90 ஆக நிர்ணயிக்கப்பட்ட விலை, இப்பொழுது 80 ரூபாய்க்கு கீழே சென்று விட்டது.

விவசாயிகள் வறுமையின் காரணமாக கொப்பரை தேங்காயை வெளி மார்க்கெட்டில் விற்கிறார்கள். கரோனா காலத்தில் தேங்காய் ரூ.18, ரூ.20 என விற்கப்பட்டது. தற்பொழுது ஆறு ரூபாய்க்கு தேங்காய் விற்பனை உள்ளது. மஞ்சு, தேங்காய் மட்டை உரிய விலை இல்லாததால் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொப்பரை தேங்காய் விலையை அரசு ஏற்றம் செய்ய வேண்டும் - நட்பமைப்பு ஆர்ப்பாட்டம்!

தென்னை நார் மற்றும் காயர் பித்து ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கண்டெய்னர்கள் அதிக அளவில் ஒதுக்கி தர வேண்டும் என மத்திய, மாநில அரசை வலியுறுத்துகிறோம். ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீரை கொண்டு செல்ல விவசாயிகள் எப்பொழுதும் அனுமதிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: களைகட்டிய எட்டயபுரம் ஆட்டுச்சந்தை - ரூ 3 கோடிக்கு மேல் விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.