ETV Bharat / state

தேனாறும் பாலாறும் ஓடாவிட்டாலும் பரவாயில்லை வெள்ள ஆறு ஓடாம இருந்தால்போதும் - எம்எல்ஏ அம்மன் அர்சன்ன் - கோவை மாவட்ட செய்தி

கோவையில் தேனாறும் பாலாறும் ஓடாவிட்டாலும் பரவாயில்லை, வெள்ள ஆறு ஓட விடாமல் இருந்தால் அதுவே போதும் என கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன் கூறினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 25, 2023, 7:19 PM IST

எம்எல்ஏ அம்மன் அர்சுணன்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மேயர் கல்பனா ஆனந்த்குமார் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வாய்கால்களை தூர்வார வேண்டும் எனவும், சாலைப் பணிகளை விரைந்து முடித்து சாலைகளை மேம்படுத்த வேண்டும் எனவும் மனு அளித்தார்.

இது குறித்து பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன், ''கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் சரியான சாலை வசதி இல்லை. 24 மணி நேர குடிநீருக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளது. இதனால் 92வது வார்டு மைல்கல் பகுதியில் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் அரசு நகரப்பேருந்து ஒன்று அதில் சிக்கிக் கொண்டது.

அதேபோல், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு, கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். இது குறித்த மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளரும் இது குறித்து ஆவன செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்பு தூர்வாரும் பணிகளை மேற்கொண்டால் தான் கோவை மக்கள் வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும்.

கோவையில் எந்தப் பகுதியிலும் மழைநீர் வடிகாலில் தண்ணீர் போக வழி இல்லாமல் அடைத்துக் கொண்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 152 திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அந்தப் பணிகளை எல்லாம் மேற்கொண்டு இருந்தால் தற்போது இந்தப் பிரச்னைகள் வந்திருக்காது. குறிப்பாக கணபதி ராஜ வாய்க்கால் பயங்கரமாக அடைத்துள்ளது. சாதாரண மழை பெய்தாலே அங்கு வெள்ளம் ஏற்படுகிறது.

அப்பகுதியில் 38 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டும் தற்போது வரை பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துடன் கேள்வி எழுப்பினால் அது சர்வேயில் இல்லை எனக் கூறுகிறார்கள். அதேபோல் வடவள்ளி பகுதியில் மக்கள் வசிப்பதால், அங்கு அமைய உள்ள ட்ரீட்மென்ட் பிளான்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

குறிப்பாக ராஜ வாய்க்காலைத் தூர்வார வேண்டும், மேலும் சாலைகளை மேம்படுத்த வேண்டும். தேனாறும் பாலாறும் ஓடாவிட்டாலும் பரவாயில்லை வெள்ள ஆறு ஓட விடாமல் இருந்தால் அதுவே போதும்” எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: ‘இந்தியப் பிரதமராக ஒரு தமிழர் ஆள வேண்டும்’ - கோவை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.