ETV Bharat / state

அயலான் வெற்றி எதிரொலி! கோவை கோயில்களில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்! - ayalaan collections

அயலான் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் உக்கடத்தில் உள்ள ராமர் கோயில் மற்றும் பேரூரில் உள்ள பட்டீஸ்வரம் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.

கோவையில் உள்ள கோயில்களில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 10:30 AM IST

கோவை கோயில்களில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

கோவை: இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘அயலான்’. ஆர்.டி.ராஜா, கொட்டபாடி ஜே.ராஜேஷ் ஆகியோரது கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த 2017இல் அயலான் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த அயலான் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் டாட்டு என்கிற ஏலியனை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கட்டுள்ளது.

இதனிடையே அயலான் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று கோவை உக்கடம் பகுதியில் உள்ள ராமர் கோயில் மற்றும் பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் அங்கு வந்த பக்தர்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து அயலான் படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமாரின் இல்லத்திற்கு புறப்பட்டார். முன்னதாக சாமி தரிசனத்தின்ம் போது நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற கோவை மாவட்ட தலைவர் வினோத் உடனிருந்தார். மேலும் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கங்குவா செகண்ட் லுக் வெளியானது.. இரண்டு கெட்டப்களில் மிரட்டும் சூர்யா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.