ETV Bharat / state

மாணவிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலின் தாக்குதல் காணொலி வைரல் - கோயம்புத்தூர் அண்மைச் செய்திகள்

கல்லூரி மாணவிகளிடம் பழகி பணம் பறிக்கும் கும்பல், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஜூனியர் மாணவர்களைத் தாக்கும் காணொலி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

காணொலி வைரல்
காணொலி வைரல்
author img

By

Published : Jun 24, 2021, 8:37 AM IST

Updated : Jun 24, 2021, 2:16 PM IST

கோயம்புத்தூர்: மானாமதுரையைச் சேர்ந்த கேசவ்குமார் கல்லூரி மாணவர். வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி, கோயம்புத்தூரில் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்றுவந்தார். இந்நிலையில் இவர் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம், 'பணம் தரவில்லையானால் உனது புகைப்படங்களை ஆபாசமாக உருமாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன்' என மிரட்டி பணம் பறித்துவந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த ஜூன் 21ஆம் தேதி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கேசவ்குமார், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் மங்கையர்கரசி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

ஜூனியர் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கும் காணொலி

மேலும் கேசவ்குமார் ஜூனியர் மாணவர்களை மிரட்டி பணம் பறித்துவந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கேசவ்குமார், அவரது நண்பர்கள் ஆகியோர் ஜூனியர் மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கும் காணொலி வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சென்னை மைதானத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!

Last Updated : Jun 24, 2021, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.