கோவையில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளி, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களைச் சாரணர் இயக்க வகுப்புக்கு அழைத்துச் சென்றுள்ளது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவியை அந்த வகுப்பைப் பார்த்துக் கொள்ளுமாறு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போது, வகுப்பில் பேசிக்கொண்டிருந்த மூன்று மாணவர்களின் பெயரை ஆசிரியரிடம் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த மூன்று மாணவர்களும் ஆசிரியர் வகுப்பில் இல்லாத நேரம் பார்த்து அந்த மாணவியை அடித்துள்ளனர்.
இதில் அந்த மாணவியின் கண் அருகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு வாரமாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் பேசுகையில், "இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது வருத்தத்துக்கு உரியது. இது போன்று அப்பள்ளியில் உள்ள வேறு மாணவர்களுக்கு நடைபெறமால் ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தின் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கவுள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்களைத் திருடி மாட்டிக்கொண்ட 70 வயது முதியவர்!