சு.சீனிவாசன். கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்நடராஜன், பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், ம.நீ.ம வேட்பாளர் மகேந்திரன், நாம் தமிழர் வேட்பாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது. கோவை மக்களவை தொகுதிக்காக வேட்பு மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் இன்று தாக்கல் செய்தனர். காலையில் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் கு.இராசமணியிடம் தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.ஆர்.நடராஜன், சிறு குறு தொழில்கள் ஜி எஸ் டி யால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.மேலும் கோவையில் குடிநீர் விநியோகத்தை தனியார் கம்பெனிக்கு கொடுப்பதை கண்டிக்கிறோம் எனவும் தெரிவித்தார்.மேலும்
கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யும் பணியை செய்வோம் என தெரிவித்த அவர், வனப்பகுதி ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும்,மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது
கடந்த காலங்களில் சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் தேர்தல் கமிஷனால் ஒன்றன்பின் ஒன்றாக அவை அகற்றப்பட்டு வருகிறது எனவும்,அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
நிலையான ஆட்சி மத்தியில் இல்லையென்றால் தேசத்தின் முன்னேற்றம் தடை பட்டுவிடும் என தெரிவித்த அவர்,மோடியின் ஐந்தாண்டு காலத்தில் விலைவாசி உயர்வே இல்லாத காலமாக உள்ளது எனவும்,கடந்த ஐந்தாண்டு காலத்தில் கடன் வாங்காதவர் பாரத பிரதமர் மோடி எனவும் தெரிவித்தார்.இந்த ஆட்சியில் கோடானு கோடி மக்களுக்கு இலவச கேஸ், கழிவறை,மின் இணைப்பு தரப்பட்டுள்ளது எனவும்,
ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தென்னிந்திய நதி இணைப்பை மத்திய அரசிடம் எடுத்து வைத்துள்ளனர் எனவும்
மோடி ஆட்சி வரும்போது கோதாவரி காவிரியுடன் இணைக்கப்பட்டு தமிழகத்தின் தண்ணீர் பிரச்சிணை முழுமையாக தீரும் எனவும் தெரிவித்தார்.
முதல்வர், துணை முதல்வர்,பாரத பிரதமர் உள்ளிட்டோர் பிரச்சாரத்திற்காக கோவைக்கு வருவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.பின்னர் பேட்டியளித்த அவர்,
சிபிஎம், பாஜக வேட்பாளர்கள் இருவரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, நற்பெயரை இழந்தவர்கள் என தெரிவித்தார்.தேசிய கட்சிகள் மாநில நலனுக்கு எதிராக இருக்கின்றன எனவும், நாம் தமிழர் கட்சி பெரு வெற்றியை பெறும் எனவும் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் கோவையில் தொழில்கள் நசிந்து போய்யுள்ளன என தெரிவித்த அவர்,
ஜிஎஸ்டியினால் பலர் வேலை இழந்துள்ளனர் எனவும் நாம் தமிழர் வெற்றி பெற்றால் தற்சார்பு பொருளாதார கொள்கையை உருவாக்குவோம் எனவும் தெரிவித்தார்.சிபிஎம், பாஜக கட்சிகள் சிறுவாணி பிரச்சணை வந்தால் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் எனவும் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மகேந்திரன் வேட்பு மனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.பின்னர் பேட்டியளித்த அவர்,
நாளை முதல் பரப்புரையை துவக்குகிறோம் எனவும்,
மநீமவிற்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
கோவை தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவோம் என தெரிவித்த அவர், மேற்கு மண்டல காவல்துறை அதிகாரி ஒருவர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக கமல்ஹாசன் கூறிய புகார் குறித்த கேள்விக்கு, இதுவரை புகார் அளிக்கவில்லை எனவும் , இனிமேலும் தொடர்ந்தால் புகார் அளிப்போம் எனவும் தெரிவித்தார்.கமல்ஹாசன் பரபாபுரைக்காக கோவை வருவார் எனவும் தெரிவித்தார்.
இவரைதொடர்ந்து் பொள்ளாச்சி மக்களவை தொகுதி மநீம வேட்பாளர் முகாம்பிகை ரத்னம் வேட்புமனுவை பொள்ளாச்சி தேர்தல் அலுவலரிடம் அளித்தார் . பின்னர் பேசிய அவர்,
பொள்ளாச்சியில் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது எனவும்,
இது போன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக வலுவான குரல் எழுப்போம் எனவும் தெரிவித்தார்
நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடையவுள்ள நிலையில், முக்கிய கட்சிகள் அனைத்தும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டன.நாளை அமமுக வேட்பாளர் அப்பாதுரை வேட்பு மனு தாக்கல் இருப்பது குறிப்பிடதக்கது..
Videos in reporter app