ETV Bharat / state

திமுகவுக்கு வெளிநாட்டவர் தீவிர வாக்குச் சேகரிப்பு - தேர்தல் பரப்புரை

ருமேனியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கோவை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

திமுக- விற்கு வெளி நாட்டவர் கருப்பு,சிவப்பு துண்டு அணிந்து வாக்கு சேகரிப்பு..!

author img

By

Published : Feb 17, 2022, 3:07 PM IST

Updated : Feb 20, 2022, 12:10 PM IST

கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஸ்டீஃபன் என்ற வெளிநாட்டவர் பொதுமக்களிடையே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தொழில்நிமித்தமாக கோவை வந்துள்ள ருமேனிய நாட்டைச் சார்ந்த ஸ்டீஃபன், திமுக துண்டு அணிந்தவாறு, சாலையில் நடந்துசென்றும், இருசக்கர வாகனம், பேருந்துகளில் பயணித்தும் பொதுமக்களுக்குத் துண்டுப் பிரதிகள் கொடுத்து திமுகவுக்கு ஆதரவு திரட்டிவருகிறார்.

திமுக- விற்கு வெளி நாட்டவர் கருப்பு,சிவப்பு துண்டு அணிந்து வாக்கு சேகரிப்பு..!

திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட ஸ்டீஃபன், அக்கட்சிக்கு ஆதரவாக வீதி வீதியாகச் சென்று பரப்புரை செய்துவருவதாக அவருடன் பரப்புரைக்குச் செல்லும் திமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். ருமேனியாவின் ஸ்டீஃபன், கோவை மக்களிடையே துண்டுப் பிரதிகள் வழங்கி வாக்குச் சேகரிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

இதையும் படிங்க: திருமண விழாவின் போது கிணற்றில் விழுந்து 13 பேர் உயிரிழந்த சோகம்

Last Updated : Feb 20, 2022, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.