கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அக்டோபர் முதல் வாரத்திலிருந்து விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சியில் என்.டி.சி.ஏ-இன் வழிகாட்டுதலின்படி அக்டோபர் முதல் வாரத்திலிருந்து கண்காணிப்பு கேமரா மூலம் விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
ஒவ்வொரு இரண்டு சதுர கிலோமீட்டருக்கும் மொத்தம் 245 சுற்றுகள் பொள்ளாச்சி வனச்சரகம், உலாத்தி, வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இப்பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும், ஒரு ஜோடி கேமரா டிராப்கள் என 490 டிராப்களை சரிசெய்து, தொடர்ந்து 25 நாட்களுக்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கேமரா மூலம் விலங்குகளின் நடமாட்டம், அறிகுறிகள் சேகரிக்கப்படும்.
ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில் அட்டகட்டி பயிற்சி மையத்தில் பொள்ளாச்சி வனச்சரக அனைத்து ஊழியர்களுக்கும் 2020 அக்டோபர் 1-ஆம் தேதி பயிற்சி நடத்தப்பட உள்ளது. மேலும் பாம்புகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு வனத்துறை சார்பில் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதில் வன உதவி பாதுகாவலர் செல்வம், நேர்முக உதவியாளர் முரளிதரன், வனச்சரகர்கள் புகழந்தி, ஜெயசந்திரன் மற்றும் வனத்துறை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: யானைகளின் தொடர் உயிரிழப்பு: ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத் துறை!