ETV Bharat / state

யானைகளின் தொடர் உயிரிழப்பு: ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத் துறை! - கோவை யாணைகள் உயிரிழப்பு

கோயம்புத்தூரில் யானைகளில்ன் உயிரிழப்பைக் கண்டறிய ட்ரோன் மூலம் வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கழுகு பார்வையில் யானைகள் கூட்டம்
கழுகு பார்வையில் யானைகள் கூட்டம்
author img

By

Published : Sep 19, 2020, 5:17 PM IST

கோயம்புத்தூர்: யானைகளின் தொடர் உயிரிழப்பு குறித்தும், உடல்நலம் பாதிக்கப்படுவது குறித்தும் கண்டறிவதற்காக வனத் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 19 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டும், யானைகளுக்கிடையே நடைபெற்ற சண்டையின் காரணமாகவும் 10-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன.

இந்த யானைகள் குறித்து ஆரம்பக் கட்டத்தில் கண்டரிய முடியாத காரணத்தால் இந்த உயிரிழப்புகளைத் தடுக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைகள், சண்டையில் காயமடைந்த யானைகள் ஆகியவற்றைக் கண்டறிய வனத் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக சிறுமுகை வனப் பகுதிகளில் யானைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், சிறுமுகை வனச் சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை வனப்பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட யானைகள் வலம்வரும் காட்சிகளை வனத் துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

கழுகு பார்வையில் யானைகள் கூட்டம்

வனத் துறையினரால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 22 யானைகள் வலம்வருவது தெரியவந்தது. அதில் யானைகள் கூட்டமாக உணவுகளை உட்கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: "ஏழு மாதங்களில் 16 யானைகள் உயிரிழப்பு..." கோவை வனப்பகுதியில் என்ன நடக்கிறது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.