ETV Bharat / state

வால்பாறையில் மலைவாழ் மக்களின் கூடாரத்தை அகற்றிய வனத்துறையினர் - மலைவாழ் மக்களால் கூடாரங்கள்

மலைவாழ் மக்களால் கூடாரங்கள் அமைக்கப்பட்டு முடியும் தறுவாயில் இருந்ததைக் கண்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்களை வைத்து கூடாரங்களை அகற்றியதால் மலைவாழ் மக்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மலைவாழ் மக்களின் கூடாரத்தை அகற்றிய வனத்துறையினர்

author img

By

Published : Dec 3, 2021, 6:10 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கல்லார் குடி தெப்பக்குள மேடு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களான காடர், இருளர், முதுவர், மலசர், மலை மலசர் ஆகிய இனத்தவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 18 செட்டில்மெண்ட் (மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி) உள்ளது. இங்கு 3000 மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மலைவாழ் மக்களின் கூடாரம்
மலைவாழ் மக்களின் கூடாரம்

மழையில் அடித்து செல்லப்பட்ட உடைமைகள்

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் வீடுகள், உடைமைகள் அனைத்தும் மழையில் அடித்துச் செல்லப்பட்டதால் உடனடியாக அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை தாய்முடி என்.சி. பிரிவில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வனத்துறையினர் குடியமர்த்தினார்.

மலைவாழ் மக்களின் கூடாரத்தை அகற்றிய வனத்துறையினர்

வீட்டுமனைப்பட்டா வழங்க - ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர், வனத்துறை உயர் அலுவலர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஈடுபட்டு தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க அரசுக்கு மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

மலைவாழ் மக்களின் கூடாரம்
மலைவாழ் மக்களின் கூடாரம்

இதனையடுத்து, கடந்த மாதம் வால்பாறைக்கு வருகைதந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியால் 21 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

மலைவாழ் மக்களின் கூடாரம்
மலைவாழ் மக்களின் கூடாரம்

முடியும் தறுவாயில் இருந்த கூடாரங்கள்

அதனடிப்படையில், அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களால் கூடாரங்கள் அமைக்கப்பட்டு முடியும் தறுவாயில் இருந்தது.

இதைக்கண்ட வனத்துறையினர் இன்று (டிச.3) காலை ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்களை வைத்து அப்பகுதியில் உள்ள கூடாரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனால், மலைவாழ் மக்களுக்கும் வனத்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நான் பேசல.. பதறிய செல்லூர் ராஜூ.. சசிகலா ஆடியோ விவகாரத்தில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.