கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியாறு அணை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த பகுதியாகும்.
இந்நிலையில், சென்ற வாரம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக ஆழியார் குரங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத் தொடங்கியது. இதனால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு குரங்கு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியது. சுற்றுலாப்பயணிகளும் அங்கு வந்து குளித்து மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. குரங்கு அருவி வறண்டு காணப்படுவதால் விடுமுறை காலங்களில் ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், குரங்கு அருவிக்கு செல்ல வனத்துறை தற்போது தடை விதித்துள்ளது.
அருவியில் தண்ணீர் வந்தால் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.