கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே தமிழக - கேரள எல்லையான அட்டப்பாடியில் மேற்கு தொடர்ச்சி மலை அருகே நீலகிரி மலைச்சரிவு பகுதியில் உள்ள சைலன்ட் வேலி, மல்லீஸ்வரர் மலைத்தொடர் பகுதியில் கஞ்சா பயிர்செய்து வளர்த்து வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் வனத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் இணைந்து வனப்பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சைலன்ட் வேலி மற்றும் மல்லீஸ்வரர் மலையில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இந்த மலைத்தொடர் கடல்மட்டத்திலிருந்து 2,000 அடி உயரத்தில் உள்ளது. சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நன்கு வளர்ந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இவை அனைத்தையும் வேருடன் பிடுங்கி அதே பகுதியில் தீயிட்டு அழித்தனர், கடந்த ஓராண்டில் மட்டும் அட்டப்பாடி பகுதியில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா செடிகள் சமூக விரோதிகளால் வளர்க்கப்பட்டு வருவதைக் கண்டறிந்து அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: