கோவை மாவட்டம், வடவள்ளி லட்சுமி நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனத்தில் லேசாக தீ பற்றி உள்ளது. இதைக் கண்ட ஊழியர்கள், அவர்களே அணைக்க முயன்றுள்ளனர். அதற்குள் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது.
இது குறித்து ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சுமார் 3 மணி நேரம் தீ பிடித்ததால் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வடவள்ளி காவல் துறையினர், நிர்வாக அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
இதையும் படிங்க: வானூரில் 12 குடிசை வீடுகள் தீயில் கருகி நாசம்!