பொள்ளாச்சி அருகே சேத்துமடை பொன்னாலம்மன் துறை பங்களாமேடு பகுதியில் அனு அங்கயற்கண்ணி என்ற பெயரில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு மின் கசிவின் காரணமாக தென்னை நார் தீ பற்றிக்கொண்டது.
இதைக்கண்டவுடன் தொழிற்சாலை உரிமையாளர் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் விரைந்து வந்த பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தால் தென்னைநார்கள் தீயில் கருகிய சாம்பலான நிலையில், ரூ. 25 லட்சம் மதிப்பு இழப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து ஆனைமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மின் இணைப்பிற்கு கையூட்டு கேட்ட இடைத்தரகர்: வைரலாகும் ஆடியோ