ETV Bharat / state

பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடக்கம் - கோயம்புத்தூர் அண்மைச் செய்திகள்

கோவையில் இன்று தொடங்கிய பெண் காவலர்களுக்கான உடற்தகுதித்தேர்வில், 400க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

உடற்தகுதி தேர்வு
உடற்தகுதி தேர்வு
author img

By

Published : Aug 2, 2021, 3:26 PM IST

கோவை: தமிழ்நாட்டில் காவல், சிறைத்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 11,813 இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. கரோனா காரணமாக உடற்தகுதித் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு, உடற்தகுதி தேர்வு நடத்த சமீபத்தில் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே ஆண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உடற்தகுதி தேர்வில் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட பெண்கள்

400க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

இந்நிலையில் கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில், பெண் காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வு இன்று (ஆக.2) நடைபெற்றது.

சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட பெண்கள்

இதில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஓட்டம், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல் போன்றவற்றில் பங்கேற்று வருகின்றனர். கோவை சரக டிஐஜி முத்துசாமி, காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட காவல் அலுவலர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ’தங்கப் பதக்கம் வென்று வாருங்கள்’ - மகளிர் ஹாக்கி அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.