கோவை: வால்பாறை அருகே குரங்குமுடியை ஒட்டிய வனப்பகுதியில் மல நாடு தனியார் எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் இரண்டு காட்டுயானைகளுக்குள் நடைபெற்ற மோதலில் பெண் யானை ஒன்று உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கோவை மாவட்ட ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது கால்நடை மருத்துவர் சுகுமார் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூராய்வு செய்தார்.
அதன்பின்னர் யானையின் உடல் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய வனத்துறையினர் பேசுகையில், ஆண் மற்றும் பெண் யானைக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பெண் யானையின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிர்ழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உக்ரைனில் மற்றொரு இந்திய மாணவர் சுடப்பட்டார்