ETV Bharat / state

காட்டுயானைகள் நிலங்களுக்குள் புகுவதைக் கண்டறிய விசாயிகளின் புது முயற்சி! - coiambature district news

கோவை: காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை முன்கூட்டியே கண்டறிவதற்கு ஏதுவாக, விவசாயிகள் விவசாய நிலங்களைச்சுற்றி கண்ணாடி பாட்டில்களைக் கட்டியுள்ளனர்.

farmers New attempt to chase away elephants
author img

By

Published : Nov 20, 2019, 11:54 AM IST

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் புலி, யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வாறு வசித்து வரும் வனவிலங்குகள் சில நேரங்களில் ஊருக்குள் புகுவதுண்டு. குறிப்பாக, காட்டு யானைகள் வனத்திலிருந்து வெளியேறி ஆனைமலை அடிவாரக் கிராமங்களான அர்த்தநாரி பாளையம், ஆண்டியூர் போன்ற கிராமங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது.

காட்டு யானைகளைத் தடுப்பதற்கு முறையான சோலார் மின்வேலி இல்லாத காரணத்தால், அப்பகுதி விவசாயிகள் விளை நிலங்களைச் சுற்றி கண்ணாடி பாட்டில்களைத் தொங்கவிட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, " காட்டுயானைகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை முன்கூட்டியே, கண்டறிந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்வதற்கு ஏதுவாக விவசாய நிலங்களைச் சுற்றி கண்ணாடி பாட்டில்கள் கட்டப்பட்டுள்ளன.

காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுவதைக் கண்டறிய விவசாய நிலங்களைச் சுற்றி கட்டப்பட்ட கண்ணாடி பாட்டில்கள்

இதன் மூலம் காட்டுயானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழையும் போது கண்ணாடி பாட்டில்கள் ஒன்றோடு ஒன்று உரசி சப்தம் கேட்கும். அப்படி சப்தம் கேட்கும் போது, உடனடியாக நாங்கள் சுதாரித்து தோட்ட வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுவோம்" என்றனர்.

இதையும் படிங்க: காவல்துறையால் அடித்து துன்புறுத்தப்பட்ட மாவோயிஸ்ட் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

Intro:ageriBody:ageriConclusion:பொள்ளாச்சி அருகே ஆண்டியூர் விவசாய நிலங்களில் யானைகளை விரட்ட பாட்டிலில் கொண்டு விவசாயிகள் புதிய யுக்தி.பொள்ளாச்சி -18 பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மலை அடிவார கிராமங்கள் அர்த்தனாரி பாளையம் ஆண்டியூர் பருத்தியூர் பூ வளப்படுத்தி மலை அடிவாரம் கிராமங்கள் உள்ளன இங்கு கரும்பு சோளம் வாழை தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது வனத்தை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துகிறது சோலார் மின்வேலி பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் உருவாகிறது இது தடுக்க விவசாயிகள் கூறும்போது வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் தோட்டங்களில் நுழையும் பொழுது பாட்டில்கள் கட்டப்பட்டுள்ள கொம்புகளுக்கிடையே யானை நுழையும்போது பாட்டில்கள் ஒன்றுக்கொன்று உரசி சப்தம் கேட்கும் தோட்ட வீடுகளில் பசிக்கும் நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுவோம் பாட்டில்கள் உடைந்து விடுவதால் யானைகள் அச்சப்பட்டு வேறு பதிவு சென்றுவிடும் தோட்டங்களில் வீடுகள் இருப்பதால் கண்காணித்து காட்டு யானைகளை விரட்டுவோம் என தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.