தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறப்பதைக் கண்டித்து, திமுக தலைவர் ஸ்டாலின் கருப்புச் சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் செய்தார். அதபோன்று, தமிழ்நாட்டு மக்கள் கருப்பு சின்னம் அணிந்து காலை பத்து மணிக்கு 15 நிமிடம் அவரவர் வீட்டில் இருந்தபடி முழக்கமிடுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு. கண்ணப்பன் அவரது இல்லத்தில் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். அதேபோன்று, கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் குமரன், அவரது இல்லத்தில் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் செய்தார்.
பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 45 நாட்களாக மத்திய, மாநில அரசுகளிடம் சரியான திட்டமிடல் இல்லாததால் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர், காவலர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளைத் திறப்பதன் மூலம் கரோனா வைரஸ் பரவத் தமிழ்நாடு அரசு துணைபோகிறது.
ஏழை மக்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் மூலமாக அரசு பறிக்க முயற்சிக்கிறது" எனக் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலருக்கு கரோனா!