தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கோவையில் இதுவரை நான்கு ஆயிரத்து 821 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக உள்ளது.
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் பிரனேஷ் கோவையிலுள்ள பிரபல மருத்துவமனைகளில் பணியாற்றினார். அதையடுத்து ராம்நகர் பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார்.
ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு 10 நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர் அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று (ஆக.1) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்படி கோவையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது.
இவரது மறைவிற்கு இந்திய மருத்துவ சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவருக்கு கரோனா: ஸ்கேன் மையத்திற்கு சீல் வைப்பு