ETV Bharat / state

20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த 2 போலி மருத்துவர்கள் கைது!

பொள்ளாச்சி: பொதுமக்களுக்கு 20 ஆண்டுகளாக சிகிச்சை அளித்துவந்த 2 போலி மருத்துவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

author img

By

Published : Nov 9, 2019, 10:49 PM IST

-pollachi

பொள்ளாச்சியில் ’பத்மா கிளினிக்’ என்ற பெயரில் 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துவந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் புனே நகரிலிருந்து சிரஞ்சி என்பவர் பத்திராவிடம் ரூபாய் 20 ஆயிரம் கட்டணம் செலுத்தி மூலநோய்க்கு சிகிச்சைப் பெற்றுள்ளார்.

சிகிச்சைக்குப்பின் சிரஞ்சியின் உடல்நிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதனையடுத்து அவரது உறவினர் மருத்துவர் ஜானி குமார் பிஸ்வாஸ் என்பவர் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் பத்ரா மீது புகார் அளித்தனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மாவட்ட மருத்துவ அலுவலர் பாஸ்கரன், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, வருவாய் ஆய்வாளர் பட்டு ராஜா ஆகியோர் பத்திராவின் கிளினிக்கில் சோதனை மேற்கொண்டனர். இதில், பத்ராவிடம் மருத்துவப் படிப்புகளுக்கான முறையான ஆவணங்கள் இல்லை என்பதும் பன்னிரெண்டாம் வகுப்புவரை மட்டுமே படித்துவிட்டு 20 ஆண்டுகளாக போலிமருத்துவராக செயல்பட்டுவந்ததும் தெரியவந்தது. இதனையடுத்த பத்ராவை கைது செய்து அவர் நடத்திவந்த பத்மா கிளீனிக் சீல் வைத்தனர்.

போலி மருத்துவர்கள் கைது

இதேபோன்று, ராமச்சந்திரன் என்பவர் கிட்னி மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் என்னும் பெயரில் நடத்திவந்த கிளீனிக் மீதும் பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் அங்கேயும் சோதனை நடைபெற்றது. அப்போது ராமச்சந்திரன் என்பவர் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாரம்பரிய மருத்துவம் என்று பேரில் மக்களை ஏமாற்றிவந்தது தெரியவந்தது. மேலும் அந்த இடத்தில் காலாவதியான மருந்துகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலி மருத்துவர் ராமச்சந்திரன் நடத்திவந்த கிளினிக்கு வருவாய்த் துறையினர் சீல்வைத்து அவரைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஒரேநாளில் பொள்ளாச்சியில் இருவேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை: போலி மருத்துவரின் கிளினிக்குக்கு சீல்!

Intro:arrestBody:arrestConclusion:பொள்ளாச்சியில் 20 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள் கைது சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி பொள்ளாச்சி 9 பொள்ளாச்சியில் பாரம்பரிய மருத்துவம் எலக்ட்ரோ ஹோமியோபதி என்னும் பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் பத்ரா என்பவர் பத்மா கிளினிக் என்னும் பெயரில் மருத்துவமனை நடத்தி தோல் நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார் மேலும் மூல நோய்க்கு மருத்துவம் பார்ப்பதாக பொது மக்களை ஏமாற்றியது தெரியவந்தது இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் புனே நகரில் இருந்து சிரஞ்சி என்பவர் பத் திராவிடம் ரூபாய் 20 ஆயிரம் கட்டணம் செலுத்தி மூலநோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளார் சிகிச்சைக்குப்பின் அவரின் உடல்நிலை மிகவும் பாதிப்பு உள்ளானது இதை அடுத்து அவரது உறவினர் மருத்துவர் ஜானி குமார் பிஸ்வாஸ் என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் புகார் அளித்தார் இதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்பேரில் மாவட்ட மருத்துவ அலுவலர் பாஸ்கரன் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா வருவாய் ஆய்வாளர் பட்டு ராஜா ஆகியோர் முன்னிலையில் பத்திர கிளினிக்கில் சோதனை மேற்கொண்டனர் இதில் பத்ம கிளினிக்கில் நடத்திய சோதனையில் பகராவின் மருத்துவ படிப்புக்கான ஆவணங்கள் இல்லை பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து தெரியவந்தது இதுகுறித்து மாவட்ட ஆயுஸ்மருத்துவ அலுவலர் பாஸ்கரன் கூறும்போது பத்ரா கடந்த 20 ஆண்டுகளாக போலி மருத்துவம் பொதுமக்களுக்கு பார்த்து வந்தது தெரியவந்துள்ளது மேலும் அவர் படித்த ஆவணங்களைப் பார்த்த பொழுது உண்மைத்தன்மை இல்லை என்றும் தெரிவித்தார் பாஸ்கரன் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கைது செய்தனர் வருவாய்த்துறையினர் போலி மருத்துவமனைக்கு சீல் வைத்தனர் இந்நிலையில் திருநீலகண்டர் வீதியில் ராமச்சந்திரன் என்பவர் கிட்னி மற்றும் கேன்சர் ஆராய்ச்சி மையம் என்னும் பெயரில் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு பொதுமக்களிடமிருந்து புகார் வந்ததை அடுத்து அங்கேயும் சோதனை நடத்தியதில் உரிய மருத்துவ படிப்புகள் படிக்காமல் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ராமச்சந்திரன் ஆயுர்வேதா சித்தா வர்ம குருகுல வைத்தியம் என்ற பெயரில் சிகிச்சை அளித்து தன்னை பாரம்பரிய மருத்துவம் என்று கூறி வந்துள்ளார் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிளினிக்கில் காலாவதியான மருந்துகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பொள்ளாச்சி வட்ட சித்தர் சித்த மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் என்றும் அங்குதான் தான் மருத்துவம் கற்றதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார் மருத்துவ படிப்புக்கான முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் காலாவதியான மருந்துகளை விற்பனைக்கு ராமச்சந்திரன் வைத்து இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் பொள்ளாச்சியில் போலி மருத்துவர்கள் கைது செய்து அடுத்து பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது போலி மருத்துவர் ராமச்சந்திரன் நடத்திவந்த கிளினிக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.