பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த ஜனவரி 5ஆம் தேதியன்று பாபு, ஹெரோன்பால், அருளானந்தம் ஆகிய மூன்று பேர் புதிதாக கைதுசெய்யப்பட்டு, கோபிசெட்டிபாளையம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று (பிப். 3) மூன்று பேரும் காணொலி கூட்டரங்கு மூலம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி நந்தினிதேவி, மூன்று பேருக்கும் பிப்ரவரி 17ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி ஏற்கனவே இதில் கைதான ஐந்து பேரை (சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த்குமார், சதீஷ்) வரும் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிறுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் வெள்ளி பொருள்கள் பறிமுதல்: வியாபாரிக்கு அபராதம்