கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்குள்பட்ட பகுதிகளில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற தொகுப்பூதிய அடிப்படையில் மூன்று மாத காலத்துக்கு தற்காலிக மருத்துவ அலுவலர்களை நியமனம் செய்வதற்காக கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நேற்று (மே 31) நடைபெற்றது.
இதில் தேர்வுசெய்யப்பட்ட 25 தற்காலிக மருத்துவர்களுக்கு கோவை அரசினர் விருந்தினர் மாளிகையில் அமைச்சர் சக்கரபாணி ரூ.60,000 மாதத் தொகுப்பூதியத்தில் பணி நியமன ஆணையை வழங்கினார்.
இந்நிகழ்வில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவராவ், கோவை மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 2,000 ஆதரவற்றவர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கும் தொண்டு நிறுவனங்கள்