ETV Bharat / state

மேட்டுப்பாளையத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு யானை உயிரிழப்பு!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே துப்பாக்கியால் சுடப்பட்டதில், மூளை சிதறி சம்பவ இடத்திலேயே யானை உயிரிழந்ததாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

elephant-shot-dead
elephant-shot-dead
author img

By

Published : Jul 2, 2020, 4:49 PM IST

Updated : Jul 2, 2020, 6:03 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வனபத்ரகாளியம்மன் கோயில், தேக்கம்பட்டி பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இது யானைகளின் வலசை செல்லும் காலம் என்பதால், பல்வேறு இடங்களில் இருந்து வந்த யானைகள் தேக்கம்பட்டியில் தங்கியுள்ளன. பவானி ஆற்றில் தண்ணீர் உள்ளதால் மலைப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் தண்ணீருக்காகவும், உணவிற்காகவும் தேக்கம்பட்டி பகுதிக்கு நாள்தோறும் வருவது வழக்கம்.

இந்நிலையில், தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடைபெற்ற பகுதிக்கு அருகே தனியார் தோட்டத்தில் காதில் ரத்தம் வழிந்த நிலையில் பெண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

elephant-shot-dead
elephant-shot-dead

முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்திருப்பது 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பதும், யானையின் காதுப் பகுதியில் ரத்தம் வழிந்த நிலையில் காயங்கள் இருப்பதால், துப்பாக்கியால் சுடப்பட்டு யானை உயிரிழந்தா? என்ற என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே உயிரிழந்த யானையின் உடல் வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையில் உடற்கூறாய்வு நடைபெற்றது. மேலும் யானையின் இடது காதுக்கு கீழ் பகுதியில் இருந்த காயத்தை ஆராய்ந்தனர். அப்போது அதில் துப்பாக்கி குண்டு பாய்ந்தற்கான அடையாளங்கள் இருந்ததால் யானையின் தலைப்பகுதி முழுவதும் சோதனை செய்தனர். சோதனையில் யானையின் மூளை பகுதியில் இருந்து துப்பாக்கி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்

இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், “யானை உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. யானையின் காது அருகே இருந்த காயத்தின் அடிப்படையில் தலைப்பகுதி முழுவதும் சோதனை செய்ததில் மூளை பகுதியில் துப்பாக்கி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யானைக்கு அருகில் நின்று கொண்டு துப்பாக்கியால் சுட்டதால் இந்த குண்டு மண்டை எலும்புகளை துளைத்துக்கொண்டு மூளைப் பகுதியை சேதம் செய்ததால் சம்பவ இடத்திலே யானை உயிரிழந்தது.

யானையின் உயிரிழப்பு தொடர்பாக தோட்ட உரிமையாளர் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் விளை நிலங்களில் யானைகள் அடிக்கடி புகுந்து சேதம் ஏற்படுத்துவதால் தோட்ட உரிமையாளர்கள் இதுபோன்று கள்ளத் துப்பாக்கிகள் வைத்து அவ்வப்போது யானைகளை விரட்டி வருவதாகவும், இது குறித்து வனத்துறையினர் தனி குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் அதிகரித்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

Last Updated : Jul 2, 2020, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.