ETV Bharat / state

உடல்நலக் குறைவால் உயிரிழந்த யானை! - யானை உயிரிழப்பு

கோயம்புத்தூரில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வந்த யானை இன்று உயிரிழந்தது.

coimbatore news  coimbatore latest news  elephant  elephant death  elephant death in coimbatore  கோயம்புத்தூர் செய்திகள்  உடல்நலக் குறைவால் உயிரிழந்த யானை  யானை  யானை உயிரிழப்பு  கோயம்புத்தூரில் யானை உயிரிழப்பு
யானை
author img

By

Published : Nov 9, 2021, 2:50 PM IST

கோயம்புத்தூர்: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி சிஆர்பிஎப் கல்லூரி அமைந்துள்ளது. இதில் கடந்த ஆறாம் தேதி அன்று வனப்பகுதியை விட்டு வெளியேறிய எட்டு வயது ஆண் யானை ஒன்று கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து, சேறாக இருந்த பகுதியில் படுத்துக்கொண்டது.

இதனைக்கண்ட அலுவலர்கள் உடனடியாக இதுகுறித்த தகவலை வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவருக்குத் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், யானைக்குச் சிகிச்சை அளித்தனர்.

உடல்நலக் குறைவால் உயிரிழந்த யானை

உயிரிழந்த யானை

இதில் உடல்நலம் தேறிய நிலையில் வனப்பகுதிக்குள் சென்ற யானையை, தொடர்ந்து வனப்பகுதியினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் காட்டுக்குள் சென்ற யானை நேற்று (நவ.8) காலை ஏழு மணிக்கு மீண்டும் வனப்பகுதியைவிட்டு வெளியே வந்து, நிலத்திற்குள் நுழைந்து படுத்துக்கொண்டது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், உதவி வனப்பாதுகாவலர் தினேஷ் தலைமையில் அங்கு சென்ற வனத்துறையினர் மற்றும் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில், சென்ற மருத்துவக்குழுவினர் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால், சிகிச்சைப் பலனின்றி இன்று (நவ.9) அதிகாலை யானை உயிரிழந்தது. இதனையடுத்து யானையின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட உள்ளது. உடற்கூராய்வு முடிந்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு - கே.கே.எஸ்.எஸ்.ஆர் பதிலடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.