தமிழ்நாட்டில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் மகாராஷ்டிராவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் பாதுகாப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி, 'கோவையில் மொத்தம் 3,048 வாக்குசாவடிகள் உன்னன, இந்த வாக்குசாவடிக்களுக்கு மொத்தம் 4267 பெட்டிகளும் கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் 4267 பெட்டிகளும் விவி பேட் இயந்திரங்கள் 4572 தாயர் நிலையில் வைக்கப்பட உள்ளது. ஏற்கனவே நம்மிடம் 753 பேலட் யுனிட் இயந்திரங்கள், 205 கன்ட்ரோல் யுனிட் இயந்திரங்கள், விவி பேட் 81 இயந்திரங்கள் உள்ளது. மேற்கொண்டு தேவைப்படும் இயந்திரங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகின்றன.
அதன் படி கோவை மாவட்டத்திற்கு மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூர் மற்றும் சதாரா பகுதியில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்படுகின்றன. முதற்கட்டமாக கோலாப்பூரில் இருந்து 3410 கன்ட்ரோல் யுனிட், 4330 விவி பேட் யூனிட், தற்போது வந்துள்ளது. வரும் 23ஆம் தேதி பெங்களூருவில் இருந்து பெல் நிறுவன ஊழியர்கள் இந்த இயந்திரங்களை சோதனையை செய்ய உள்ளனர்.
அதன்பின் தேர்தல் குறித்த நடவடிக்கைகள் அரசியல் கட்சியினர், செய்தியாளர்கள் முன்னிலையில் வெளிப்படையாக நடைபெறும். வருகிற ஜனவரி மாதம் வாக்கு பெட்டிகள் வைப்பதற்கு கட்டப்பட்ட கட்டடம் தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று திறக்கப்படும்' என்றும் தெரிவித்தார்.