ETV Bharat / state

சுற்றுலா வந்த 8 வயது சிறுமி கார் மோதி விபத்தில் உயிரிழப்பு! - கார் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழப்பு

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த ஆழியாற்றுக்கு சுற்றுலாக் காணவந்த 8 வயது சிறுமி கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கார் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழப்பு
கார் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழப்பு
author img

By

Published : Nov 16, 2020, 8:11 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணைக்கு, சுற்றுலாக்காக திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தைச் சேர்ந்த பனியன் தொழிலாளி புவனேஷ்வரன், அவரது 8 வயது மகள் வர்சா, குடும்பத்தினர் இலக்கியா, சபரீஸ், பிரியா, யுவராஜ், துர்கா ஆகியோருடன் வந்தார்.

ஆழியாறு அணையை பார்வையிட்ட பின்பு மேல்மட்ட பாலத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்தில் புகுந்தது.

அதில் திருப்பூர் புவனேஷ்வரன் குடும்பத்தினர் பலத்த காயமடைந்தனர், சிறுமி வர்சா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆழியாறு காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்த 6 பேரை மீட்ட காவல் துறையினர், அவர்களை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கார் ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வால்பாறை கக்கன் காலணியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் கேரளாவிலுள்ள கோயிலுக்குச் செல்வதற்கு வந்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: குரங்குகளுக்கு பயந்து மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.