ETV Bharat / state

100 நாளில் 27 நாடுகள் - ஜக்கி வாசுதேவின் மோட்டார் சைக்கிள் பயணத் திட்டம்

author img

By

Published : Mar 5, 2022, 7:50 PM IST

மண் வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 100 நாட்கள், 27 நாடுகளுக்குச் சென்று 30 ஆயிரம் கிலோமீட்டரை மோட்டார் சைக்கிளில் பயணிக்க உள்ளதாக ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேட்டி
ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேட்டி

கோயம்புத்தூர்: ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கோவை வாலாங்குள குளக்கரை பகுதியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "மண்ணை காப்பாற்ற உலகம் முழுவதும் சேர்ந்து மக்கள் இயக்கம் தொடங்கப்பட உள்ளது. வருங்காலத்தில் தோராயமாக 60 முதல் 80 வகையான பயிர்கள் மட்டுமே இருக்கும் என உலக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2045ஆம் ஆண்டு உணவு தயாரிக்கும் சக்தி 40 சதவீதமாகக் குறையும் எனவும் கூறுகின்றனர்.

மக்கள் தொகை 50 பில்லியினுக்கும் மேல் வரும்போது, மக்களுக்கு ஏற்ற உணவு உற்பத்தி குறைந்து இருக்கும். இப்போதிருந்தே பயிர்களை மீட்டெடுக்க வாய்ப்பு இருக்கிறது. சில திட்ட மாற்றம் மூலம் மண் வளத்தைப் பாதுகாக்க முடியும். உலகம் முழுவதும் 730 அரசியல் கட்சியினருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். மண், மண்ணில் உள்ள உயிர்கள் குறித்துத் தேர்தல் வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.

மூன்று தன்னார்வ அமைப்புகள் ஈஷாவுடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். இசை, சினிமா விளையாட்டு என அனைத்துத்துறை வல்லுநர்களும் உடன் பயணிக்கின்றனர். வரும் மார்ச் 21ஆம் தேதி மண்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் எனச் சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த 100 நாட்களில், 27 நாடுகளுக்குச் சென்று 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் பயணிக்க உள்ளேன்.

ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேட்டி

இந்த நேரத்தில் பல சவால்களைக் கடக்கவேண்டும். பனி, வெயில், மழை, போர் என அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ளும் விதமாக இந்த பயணம் இருக்கும். கடந்த இரண்டு வருடத்தில் எங்கே போனாலும் மண் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. பூனைக்கு மணி கட்ட முட்டாள் தேவை என்பதற்காக நான் இதைச் செய்கிறேன்" எனத் தெரிவித்தார்.

உக்ரைனில் நிற பிரச்சனை இருக்கிறது

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "உக்ரைனில் போர் காரணமாகச் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு, ஈஷா தன்னார்வலர்கள் மத்திய அரசுடன் சேர்ந்து உதவி செய்து வருகின்றோம். தங்குமிடம் போக்குவரத்து போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் ஏற்பட்டிருப்பது கஷ்டமான நிலை. ரஷ்யாவுடன் பேசி வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து இருக்கின்றனர்.

உக்ரைன் நிற பிரச்சனை இருக்கிறது. தோலைப் பார்த்து ரயிலில் ஏற்றுவதில்லை. இந்தியர்களை ரஷ்யா வழியாகக் கொண்டு வரும் முயற்சி நல்ல முயற்சி. தூரம் அதிகம் என்றாலும் பாதுகாப்பானவை இன்னும் 11 ஆயிரம் பேர் அங்கு உள்ளனர். நீர்நிலைகள் நன்றாக இருக்க மண்ணைக் காக்க வேண்டும். 84 சதவீதம் தண்ணீர் விவசாயத்திற்குப் போகின்றது. தற்போது, மண்ணில் இருக்கும் உயிர்ச்சத்து 68 சதவீதமாக இருக்கின்றது. இவற்றை 8 முதல் 10 சதவீதத்திற்கு உயர்த்த வேண்டும்.

மண்ணிற்கு முழு சக்தி வந்துவிட்டால் 100 லிட்டர் நீரில் நடைபெறும் விவசாயம், 30 மில்லி லிட்டர் நீரில் செய்ய முடியும்" எனத் தெரிவித்தார். முன்னதாக, மண் வளத்தைக் காக்க வலியுறுத்தி ஈஷாவிலிருந்து விமான நிலையம் வரை இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையும் படிங்க: எட்டு மாவட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் நீக்கம்.... அண்ணாமலை திடீர் முடிவு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.