நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக கேரளாவில் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்த இணையதளம் மூலம் அனுமதி பெற வேண்டும். அதே சமயம் 75 முதல் 100 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று (ஏப். 18) ஒரேநாளில் கேரளாவில் 13 ஆயிரத்து 835 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் அதிக எண்ணிக்கை தொற்று உறுதியானதால், கேரள எல்லைகளில் அம்மாநில அரசு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக வாளையாறு, வேலந்தாவலம் உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகள் மூடப்பட்டு கோவை வழியாக கேரளா சொல்வோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. இன்றுமுதல் நாள் என்பதால் சோதனைச்சாவடிகளில் இருந்தவாறு இ-பதிவு செய்யவைத்து அனுப்புகின்றனர்.
நாளைமுதல் இ-பாஸ் பெறாமல் வருவோர் கட்டாயமாகத் திரும்பி அனுப்பப்படுவார்கள் எனக் கேரளா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ’தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை’ - மகேஷ்குமார் அகர்வால்