ETV Bharat / state

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்! - donkey marriage

கோவை: அன்னூர் அருகேயுள்ள லக்கேபாளையத்தில் மழைவேண்டி கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்துவைத்து வருணபகவானை வழிபாடு செய்தனர்.

கழுதைகளுக்கு திருமணம்
author img

By

Published : Aug 4, 2019, 1:39 PM IST

பொதுவாக மழையின்மை காரணமாக கடும் வறட்சி ஏற்படும்போது, பொதுமக்கள் ஒன்று கூடி வருணபகவானை வழிபாடு செய்வது வழக்கம். மழை வரவேண்டும் என்பதற்காக அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்துவருவது வழக்கம்.

இந்நிலையில், கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் அங்கு வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

கழுதைகளுக்கு திருமணம் செய்துவைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் கழுதைகளுக்கு திருமணம் செய்வது என கிராம மக்கள் முடிவு எடுத்தனர். அதன்படி பிளக்ஸ் அடித்து, சீர்வரிசை எடுத்துவந்து இன்று சுப்பிரமணியர் கோயிலில் மேளதாளம் முழங்க திருமணம் நடத்தப்பட்டது.

ஒரு ஆண், பெண் கழுதையை மணமக்கள்போல் அலங்கரித்து மாலை அணிவித்து கோயில் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அங்கிருந்த கிராம மக்கள் அர்ச்சனை தூவி கழுதைகளுக்கு திருமணம் நடத்திவைத்தனர்.

மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம்

இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், கழுதைகளுக்கு திருமணம் செய்துவைத்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். அதன்படி மழை வரவேண்டி கழுதைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது என்றார்.

இத்திருமணத்திற்கு வந்தவர்கள் மொய்ப்பணம் கொடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கம்பங்கூழ் வழங்கப்பட்டது.

Intro:கோவை அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர். பிளக்ஸ் அடித்து கழுதைகளுக்கு அலங்காரம் செய்து சீர்வரிசை எடுத்து வந்து மேளதாளம் முழங்க திருமணம் நடத்தப்பட்டது.Body:
கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள கிராமம், லக்கேபாளையம். இக்கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பஞ்ச கல்யாணி திருமணம் செய்வது என கிராம மக்கள் முடிவு எடுத்தனர். அதன்படி இன்று சுப்பிரமணியர் கோவிலில் கழுதைகளுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தை ஒட்டி அடிக்கப்பட்ட பிளக்சில் மழையே வருக வருக என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
லக்கேபாளையம் பகுதியை சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையம் ஆண் கழுதை மணமகனாகவும் அலங்காரம் செய்யப்பட்டது. பெண் கழுதைக்கு புடவை கட்டி, வளையல், பாசி, அணிவித்து, உதட்டுச்சாயம் மற்றும் நெகச்சாயம் பூசி மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல ஆண் கழுதைக்கு வேஷ்டி மற்றும் துண்டு அணிவிக்கப்பட்டு மணமகன் அலங்காரம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெற்றது. மேளதாளம் முழங்க கிராம மக்கள் சீர்வரிசைகளை எடுத்து வந்தனர். கோவிலில் பூஜை செய்யப்பட்ட பின்னர், மேளதாளம் முழங்க பெண் கழுதைக்கு தாலி அணிவிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது
பேட்டி : சந்திரசேகர் - லக்கேபாளையம்
கிருஷ்ணவேணி - லக்கேபாளையம்
கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம் எனவும், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான வறட்சி நிலவிய போது, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்ததை தொடர்ந்து மழை பெய்தாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
பேட்டி : சீனிவாசன் - லக்கேபாளையம்
எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி இருப்பதாகவும், மனிதர்களுக்கு திருமணம் செய்யும் முறைப்படி திருமணம் நடத்தி இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து மறுவீடு அழைப்பும் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்தவர்கள் மொய்ப்பணம் கொடுத்து சென்றனர். திருமணம் வந்தவர்களுக்கு கம்பங்கூழ் வழங்கப்பட்டது.
மனிதர்களுக்கு திருமணம் நடைபெறுவது போலவே கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இத்திருமணத்தை தொடர்ந்து கட்டாயம் மழை வருமென்ற நம்பிக்கையில் கிராம மக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.